மே மாத ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்

மே மாத ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்

சுறுசுறுப்பாக எதையும் செயல்படுத்தத் துடிக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதால் சனியால் வரும் அர்த்தாஷ்ட சனியின் தாக்கம் குறையும். எளிதில் காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் தன பூர்வ புண்ணியாதிபதியான குரு.. உங்களின் ராசியை பார்ப்பதால் இதுவரை பல்வேறு சிரமங்களையும், சில உடல் பாதைகளை பெற்று வந்து உங்களின் நிலையில்... நல்ல மாற்றம் உண்டாகி, அதிலிருந்து விடுபடுவீர்கள்.
 
உங்களின் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் லாபஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்வை இடுவது.. உங்களின் செயல்களில் துணிச்சலும், மனோ வலிமையும் உண்டாகும். காரியத்தில் முழுமையான ஈடுபாடுகளுடன் செயல்படுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் செயலில் திறனுடன் செய்து வருவீர்கள்.
 
விவசாய பணிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிற்சங்க பணிகளில் முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டு செயல்படுவீர்கள். தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சிலருக்கு வேலை பார்க்குமிடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படலாம். 
 
வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் அமையும். நேர்மையுடன் செயல்படவேண்டுமென்று எண்ணுவீர்கள். விளையாட்டு துறையில் எதையாவது சாதிக்க வேண்டுமென்று எண்ணி செயல்படுவீர்கள். கலைதுறையினருக்கு சில காரியம் தடை பட்டாலும் உங்களின் நாளாந்த தேவைகள் பூர்த்தியாகும்.
 
சொல்லியபடி நடக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை விரைவில் செய்து முடித்து, நற்பெயர் பெறுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தனி ஒருவராக இருந்து பலவித காரியங்களில் ஈடுபட்டு நன்மையை பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
10-05-2024 வெள்ளி இரவு 01.02 முதல் 13-05-2024 திங்கள் கலை 08.23 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, ஓரஞ்சு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், வியாழன், ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி, சிவப்பு நிற பூவால் மாலை சாற்றி, வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.